Tag யாழ்ப்பாணம்

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய குற்றத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை களவாடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில்…

இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் , சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி இறுதி கிரியைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் செய்துள்ளனர்.  இந்திய அமைதி படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987ஆம் ஆண்டு கால பகுதியில் பெண்ணொருவரையும் அவரது மகனையும் இந்திய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்தனர்  அக்கால பகுதியில்…

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்து வைத்த வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி , சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் , விகாரையை அகற்றி, தமது…

யாழ்ப்பாணத்தில் தவறுதலாக டீசல் குடித்து குழந்தை உயிரிழந்தது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் குழந்தை ஒன்று குளிர்பானம் என நினைத்து போத்தலில் இருந்து டீசலைத் தவறுதாகக் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிற்சை பலனின்றி குழந்தை நேற்று…

வீடு செல்லமாட்டேன்:டக்ளஸ் விடாப்பிடி!

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம்  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட  பின்னடைவை  சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று விடயங்களை…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது ஆதீரா Sunday, March 23, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது, 805 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. …

யாழில் இன்றும் 84 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா பொதிகளை மீட்டனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 84…

யாழில். டீசலை சோடா என அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என அருந்திய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது  ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.  குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு இயந்திர திருத்த வேலைகள் இடமபெற்ற போது, சோடா போத்தல் ஒன்றில் டீசலை வைத்துள்ளனர்.  அதனை…

தையிட்டி விகாரையில் மற்றுமொரு சட்டவிரோத கட்டடம் – கைவிலங்குகளுடன் வந்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன அந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு…

தமிழக முகாம்களில் 58,104 ஈழ அகதிகள்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள…