Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாருக்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார். அறிக்கைகளை சமர்ப்பித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, அந்த வேட்பாளர்கள் மீது பொலிஸார் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும்…
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி தொடங்கி வவுனியா,முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையென கைகள் கடந்து செல்ல தொடங்கியுள்ளது. இதனிடையே வவுனியாவை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு…
தியாக தீபம் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் முன்பாக வழிபாடு செய்வது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் சிங்கள பேரினவாத ஒற்றையாட்சியை நிராகரித்து தனி நாட்டை கோரிய…
ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார் ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் உடல்நல குறைவால் நேற்றைய தினம் சனிக்கிழமை காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிகண்டி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதியில் , படகொன்றில் கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இறக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு இராணுவ புலனாய்வாளர்கள் விரைந்த போது. கஞ்சா போதை பொருளை…
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை முன்னெடுத்த நகர்வுகள் ஒரு சாராரிடம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்ற தமிழினத் துரோகிகளோடு பேச்சு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அவ்வாறு பேசினால் பேசுபவர்கள் எம்மோடு இருக்க முடியாதென கொந்தளித்துள்ளார் சுகாஸ் கனகரட்ணம்.விடுதலைப்போரில் 50,000 பேரும் வெடித்துச்…
பொன்னாலை கடற்பரப்பில் இலங்கை கடற்படை ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை பகுதியில் உள்ள பத்து காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையான தொலைபேசியில் நபரொருவர் காங்கேசன்துறை பகுதியில் உள்ள…