Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் இந்திய துணைத் தூதுவர் முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஆ.நடராஜன் நேற்றைய தினம் சனிக்கிழமை மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அதன் போது, மூளாயில் அமிர்தலிங்கத்தின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து…
யாழ்ப்பாணத்தில், வலு சக்தி அமைச்சரின் நிகழ்வில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர்கள் பதிவிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின்…
யாழில் ஊடகங்களிற்கு வகுப்பெடுக்க முற்பட்ட சந்திரசேகரனின் அல்லக்கை இளங்குமரன் இறுதியில் மன்னிப்பு கோரிய பரிதாபம் நடந்துள்ளது. இனிமேல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் உரையாற்றிய போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மின்சார மற்றும் சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி யாழ்ப்பாணத்தில் மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என உறுதியளித்து…
யாழ்ப்பாணத்திற்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டமையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே…
யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏழாலை தெற்கை சேர்ந்த சிவராசா பிரவீன் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த…
மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர்…
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றின் மூன்று நீதிபதிகள்…
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனு தாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. யாழ்.மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ் மக்கள் கூட்டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…
பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் ,…
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் தம்மையும் இணைத்துக்கொள்ளவேண்டுமென தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவு கடற்றொழில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. அத்துடன் பேச்சவார்த்தைகளை யாழ்.மாவட்டத்திலேயே நடாத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அத்தகைய…