Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் வடலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா (வயது 80) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் , முதியவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். …
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் நாகரிகம் கலாச்சாரம் மற்றும் புவியியல் உறவுகளை மேம்படுத்த எல்லைகள் கடந்து சுற்றுலா துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த “சுற்றுலா மாநாடு – 2025 ” யாழ்ப்பாணம்…
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை சந்தித்த தூதுவர் , அவர்களின் குறைகளையும் நீதிக்கான போராட்டத்தையும் கேட்டறிந்தார். அத்துடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் என உறுதி…
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில்…
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (18) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த…
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச்…
யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன்…
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச…
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11…
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்காக 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவன்…