Tag யாழ்ப்பாணம்

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.  அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர்களால்…

யாழில் இந்திய யோகா?

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்களுடன் சர்வதேச யோகா தினம் 2025 யாழ் கலாச்சார மையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,700 இற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்துள்ளது. இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி வரவேற்க விழாவில், யாழ்ப்பாண மாநகர சபை…

மயிலிட்டி சந்தியில் போராட்டம்!

மயிலிட்டி சந்தியில் போராட்டம்! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இருந்து விடுவிக்கப்படாத மீதி காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் மயிலிட்டி சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.  முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலப்பகுதியில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு வீதியையும் காணியின் சிறு பகுதியையும் ரசு விடுத்திருந்தது.எனினும் தேர்தல்…

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி ஏற்றப்படவுள்ள அணையா தீபம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள் அணையா தீபம் என தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி திங்கட்கிழமை காலை முதல் புதன்கிழமை…

வழுக்கையாற்றை புனரமைப்பது தொடர்பில் ஆய்வு

யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளனர் யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கும் வழுக்கையாறு அராலியில் முடிவடைகிறது.  இந்த வழுக்கையாறு என்பது மழை காலத்தில் வெள்ள நீர் ஓடுவதால் உருவாகும்…

எமது நிலத்தினை விட்டு வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் – எமது நிலமே எமக்கு வேண்டும்

வலிகாமம் வடக்கிலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதி வழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட தனியார்…

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி ,அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு  யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த நிலையத்தால் , அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  மருத்துவ, இலத்திரனியல், இரசாயன ,…

நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.  கடந்த 10ஆம் திகதி நண்பர்க்ளுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை , ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் , நண்பர் ஒருவர் மண் வெட்டி பிடியால்…

ஓமந்தையில் இந்திய துணைத்தூதராக அதிகாரியின் கார் விபத்து – உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு

ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது  குறித்த விபத்து படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) என்பவரே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்  வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்…

தளராத முன்னாள் போராளி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களது அழுத்தங்களையும் தாண்டி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக  அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவரும் மீனவ சங்க பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா  தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தவிசாளர் தெரிவிற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.…