Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கைக்குழந்தை உட்;பட்ட மூவரின் உடல்கள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக் தமது அன்புக்குரியவர்களை தொலைத்த உறவுகளை சந்தித்தேன். பெண்கள் 1990 களின் நடுப்பகுதியில் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். தாங்கள் நேசித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு யூலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம்கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களால் புகையிரத…
செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர்…
யாழ் . மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீள் குடியேற்றங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட கட்டளை தளபதி , மாவட்ட செயலருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம்…
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள்…
பொலிசாரின் வாகனத்தினை மோதி விபத்துக்குள்ளாக்கும் விதத்தில் டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி சென்ற டிப்பர் வாகன சாரதியை சுமார் 04 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை நுணாவில் பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் மறித்த வேளை வாகனத்தினை பொலிஸாரை மோதும்…
செம்மணி மனித புதைகுழியினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதனை…
செம்மணியில் செப்புப்பட்டயம்! இன்று நிறைவுபெற்ற செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரும் மக்கள் செயலின் அணையா விளக்கு போராட்டத்தின்போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆறம்சக் கோரிக்கைகள் அடங்கிய செப்புப் பட்டயம். No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது குறித்த விபத்து…