Tag யாழ்ப்பாணம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்

வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று…

செம்மணியில் இன்று சனிக்கிழமையும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  இன்றைய  அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்…

உணவைத் தேடுவது ஒருபோதும் மரண தண்டனையாக இருக்கக்கூடாது – ஐ.நா பொதுச் செயலாளர்

காசாவில் ஐ.நா தலைமையிலான மனிதாபிமான முயற்சிகள் நெரிசல் அடைகின்றன என்றும், உதவிப் பணியாளர்களே பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.  பாலஸ்தீன எல்லைக்குள் மற்றும் அதன் வழியாக உதவிகளை வழங்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார். தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் உணவளிக்க முயற்சிக்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். உணவு தேடுவது ஒருபோதும் மரண…

பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல்

பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல் யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் முட்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்வதற்கும் எந்த நேரத்தில்…

பலாலி அம்மனை வழிபட மீண்டும் தடை – முட்கம்பி வேலிக்கு முன்பாக கற்பூரம் கொளுத்தி வழிப்பட்ட மக்கள்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.…

யாழில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார்  மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்றவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால்…

யாழ்.மாநகர சந்தை கலகலக்க தொடங்கியது!

யாழ்.மாநகரசபை வழமை போலவே கூச்சல் குழப்பங்களுடன் தள்ளாட தொடங்கியுள்ளது. சபைக்கான நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (27)விசேட அமர்வுக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில்    முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின்…

செம்மணி:வலிதருகிறது!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தின் புதைகுழியில் குழந்தையை அணைத்தவாறாக தாய் ஒருவரதும் குழந்தையினதும் என்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டள்ளது.  செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டமாக இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு…

பலாலி சந்தையை விடுவியுங்கள்

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில், எங்களுடைய மக்கள் இன்னும் 2400…

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்…