Tag யாழ்ப்பாணம்

யாழில். வீதி மின் விளக்கினை திருத்த முற்பட்டவர் மின்சாரம் தாக்கி படுகாயம்

யாழில். வீதி மின் விளக்கினை திருத்த முற்பட்டவர் மின்சாரம் தாக்கி படுகாயம் ஆதீரா Tuesday, July 01, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில்…

செம்மணி புதைகுழி தொடர்பில் Ai மூலம் படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் காணப்படும் எலும்பு கூடுகளை…

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.    செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம்…

நெடுந்தீவு:இனி ஈபிடிபியிடமில்லை!

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நெடுந்தீவு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன்…

செம்மணி எச்சங்கள்:இலங்கையில் ஆய்வாம்!

செம்மணியில் மீட்கப்படும் மனித என்புக்கூட்டு எச்சங்களை சர்வதேச நாடுகளிற்கு அனுப்பாது இலங்கையினுள் ஆய்வு செய்ய அனுர அரசு தயாராகிவருகின்றது. இந்நிலையில் ஐ. நா விடம் தொடர்புடைய காபன் பரிசோதனைகளை முன்னெடுக்கும் ஆய்வு கூடத்தை பெறுவதற்கான கோரிக்கை அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஜநா மனித உரிமைகள் ஆணையரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆய்வுகூடத்தை மட்டுமன்றி பரிசோதனைகளை செய்வதற்கு…

நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவாகியுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. தவிசாளர் பதவிக்காக இலங்கை…

வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள்…

மயிலிட்டி சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்க கோரிய மக்கள்

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா , க,இளங்குமரன் , வலி. வடக்கு பிரதேச…

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை

தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இப்போது மக்களை உசுப்பேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என நெடுச்சாலைகள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை முதலீட்டாளர்களிடமே கையளிக்கப்படும்

கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத்…