Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு சிக்கலாகும் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணையில் எந்த முன்னேற்றமும்…
செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய தினமான செவ்வாய்க்கிழமை அகழ்வின் போது நான்கு என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை இதுவரை 50 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின்…
தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை 9 (புதன்கிழமை) மாலை 4:30 மணி…
யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையின் தீர்மானங்களுக்கு மாறாக, தவிசாளருக்கும் தெரிவிக்காமல் செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் சபையின் ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதை அடுத்து தவிசாளரால் சபை அமர்வு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் சபை…
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறிய அமைச்சர், அச்சுவேலி பொலிஸ் நிலையப்…
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலைகளிலுள்ள உளவள ஆசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி அவர்கள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய…
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை சேகரித்து…
செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார். …
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து…
செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை செம்மணியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேலும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள்…