Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர் , அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக…
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி , ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். …
தையிட்டி போராட்ட களத்தை திசை திருப்ப அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதான குற்றச்சாட்டின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையே முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அல்ல என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாண நட்சத்திர விடுதி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உட்பட மூவருக்கு…
வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட…
தையிட்டியில் விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில்…
வடக்கு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம் எதிர்வரும் 24ஆம் தேதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் தெரிவித்தார். எனவே விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசிகளின் போதில்களை சூழலில் வீசாது அவற்றை தமது தோட்டப்புறங்களில் வைத்தால் அவற்றை விவசாயத் திணைக்களம் கொள்வனவு செய்யும்…
உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் இ , சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,…
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அதனை…
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். யாழ்ப்பாணம் –…