Tag முதன்மைச் செய்திகள்

புதிய பங்காளிகளுடன் முன்னணி ஆர்ப்பாட்டம்!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

செம்மணி புதைகுழி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: சர்வதேச விசாரணை வேண்டும் – சாணக்கியன்

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்  இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன் அதில் சர்ச்சைக்குரிய…

பிரான்ஸ் மார்சேய் அருகே பெரும் புகை மேகங்கள்: குடியிருப்பாளர்களை பயமுறுத்தும் தீ!

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் நகரவாசிகளை பீதியடையச் செய்யும் வகையில், மிகப்பெரிய புகை மேகங்களுடன் கூடிய காட்டுத்தீ ஒன்று கடலோர பெருநகரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.  தீயை அணைக்க 230 அவசர வாகனங்கள், தீயணைப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளுடன் 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் தொகை மற்றும் கட்டிடங்களைப் பாதுகாக்க…

தையிட்டி காணி அபகரிப்பு: போராட்டதிற்கு முன்னணி அழைப்பு!

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை 9 (புதன்கிழமை) மாலை 4:30 மணி…

வலி தெற்கில் அமர்வு ஆரம்பமாகும் போது குழப்பம்!

யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையின் தீர்மானங்களுக்கு மாறாக, தவிசாளருக்கும் தெரிவிக்காமல் செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் சபையின் ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதை அடுத்து தவிசாளரால் சபை அமர்வு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் சபை…

பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ்த்தரப்பு பொதுவேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் – கஜேந்திரகுமார்

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில்…

டிரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரிக்ஸ் தலைவர்கள் சந்திக்கின்றனர்

வளர்ந்து வரும் வளரும் நாடுகளின் பிரிக்ஸ் குழுவின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ரியோ டி ஜெனிரோவில் சந்தித்து, பலதரப்பு இராஜதந்திரத்திற்கான பிரிக்ஸ் குழுவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது தொடக்க உரையில், பன்முகத்தன்மையின் இணையற்ற சரிவை நாம் காண்கிறோம் என்று கூறினார். சர்வதேச நிர்வாகம் 21 ஆம்…

செம்மணி புதைகுழி: சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – சத்தியராஜ்

செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகரும் தமிழ்த் தேசிய உணர்வாரும் தமிழீழ ஆதரவாளருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட.…

பாதிரியார் உட்பட பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது!

தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டன் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இன்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டனில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாராளுமன்ற சதுக்கத்தில் அதிகாரிகள் நுழைந்து, அந்தக் குழு இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், ஆதரவைக் காட்டுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும்…

ஈரான்-இஸ்ரேல் போருக்குப் பின்னர் ஈரானின் கமேனி முதல் முறையாகத் தோன்றினார்!

ஈரான்-இஸ்ரேல் போருக்குப் பின்னர் ஈரானின் கமேனி முதல் முறையாகத் தோன்றினார்! மதுரி Sunday, July 06, 2025 உலகம், முதன்மைச் செய்திகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை ஒரு துக்க விழாவில் கலந்து கொண்டதாக அரசு ஊடகம் வெளியிட்ட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேலுடனான 12…