Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறைச்சாலைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போதைப்பொருள் பயன்படுத்துவர்களின் தொலைபேசிகள், மகிழுந்துகள், உந்துருளிகள், குவாட் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துவருகிறது. சிறைத் தாக்குதல்களின் அலைக்குக் காரணமான கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் போதைப்பொருள் பாவனையாளர்களின் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்ய பிரான்ஸ் தொடங்கும். குறிப்பாக செய்தியிடல் செயலிகள் மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்களை…
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினைச் சமாளிப்பது எளிதாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ஜெலென்ஸ்கியுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற…
உலகில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிய நிறமாற்றத்தைச் சந்தித்து வருகின்றன என அறிவியாளர்கள் இன்று புதன்கிழமை அறிவித்தனர். 84% பவளப்பாறைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே 1998, 2014, 2017 ஆண்டுகளில் பவளப்பாறைகள் வெண்மையான நிகழ்வுகள் நடத்தேறியுள்ளன. பவளப்பாறைகளுக்குள் வாழ்ந்து அவற்றை உண்ணும் வண்ணமயமான பாசிகள், நீரை வெப்பமாக்குவதன் விளைவாக நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்…
டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டாவிற்கு ஐரோப்பிய ஆணையம் மில்லியன் கணக்கான அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் (DMA) கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டா ஆகியவை கடமைகளை மீறியதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை கண்டறிந்து , இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் முறையே €500…
போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்…
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான அழகிய பஹல்காம் நகரைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை நான்கு துப்பாக்கிதாரிகள் பல சுற்றுலாப் பயணிகள் மீது அருகில் இருந்து…
உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் அடுத்த போப்பாண்டவராகவும், தலைவராகவும் போப் பிரான்சிஸுக்குப் பின்னர் யார் வருவார்கள் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் கார்டினல்களின் மாநாடுதான் இறுதி முடிவை எடுக்கும். போப்பாண்டவர் தெரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பகால வலுவான போட்டியாளர்கள் வருகிறார்கள். வத்திக்கான் நகரத்தின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும்…
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இறந்த பின்னர் அவரின் இடத்திற்கு புதிய போப்பாண்டவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். போப்பின் அக்க ஏற்பாடுகளை வத்திக்கான் செய்யும். இதற்கான விரிவான வழிமுறைகளை ஏற்கனவே போப் பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்நாளில் வழங்கியிருக்கிறார். காலம் சென்ற முன்னால் போப் பாண்டவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது போன்று செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்,…
கத்தோலிக்க மக்களின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தனது 88வது வயதில் இன்று காலை 7.35 மணியளவில் காலமானார். நேற்று ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மக்கள் முன்னிலையில் தோன்றி தனது வாழ்த்துக்களைக் கூறி ஆசீர்வாதத்தையும் வழங்கியிருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் போப்பாண்டவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்,…