Tag முதன்மைச் செய்திகள்

பெருவில் 5,000 ஆண்டுகள் பழைமையான பெண்ணின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பெருவின் கேரல் நகரில் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எச்சங்களை தோண்டி எடுத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரு பெண்ணைப் போன்றது. ஒரு உயரடுக்குப் பெண் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் பலோமினோ ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் எச்சங்கள் துணி…

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அன்சாக் தினத்தை கொண்டாடுகின்றன!

போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அன்சாக் தினத்தைக் கொண்டாடினர். அன்சாக் என்பது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளைக் குறிக்கிறது. முதலில், 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் உள்ள கல்லிபோலி தீபகற்பத்தைக் கைப்பற்ற இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்ச்சியைக்…

மீன்பிடித்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது அமைச்சர் சந்திரசேகரனுடன் சென்றவர்கள் தாக்குதல் –

முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார…

பிரான்ஸ் பள்ளியில் கத்திக்குத்து: ஒருவர் பலி: மூவர் காயம்!

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று வியாழக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்திய 15 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து…

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்கள் அதிகரிக்கிறது – ஐ.நா. எச்சரிக்கை

தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற  தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களின் பரவலில் உலகளாவிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கையானது  WHO, UNICEF மற்றும் Gavi நிறுவனங்களால் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.  கடந்த ஐந்து தசாப்தங்களாக தடுப்பூசிகள் 150 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. உலகளாவிய சுகாதாரத்திற்கான நிதி வெட்டுக்கள் இந்த…

சிறைச்சாலைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போதைப்பொருள் பயன்படுத்துவர்களின் தொலைபேசிகள், மகிழுந்துகள், உந்துருளிகள், குவாட் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துவருகிறது. சிறைத் தாக்குதல்களின் அலைக்குக் காரணமான கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் போதைப்பொருள் பாவனையாளர்களின் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்ய பிரான்ஸ் தொடங்கும். குறிப்பாக செய்தியிடல் செயலிகள் மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்களை…

ஜெலென்ஸ்கி அமைதி ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருகிறார் – டிரம்ப்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினைச் சமாளிப்பது எளிதாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ஜெலென்ஸ்கியுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற…

வெளிறிய நிலையில் உலகில் 84% பவளப்பாறைகள்!

உலகில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிய நிறமாற்றத்தைச் சந்தித்து வருகின்றன என அறிவியாளர்கள் இன்று புதன்கிழமை அறிவித்தனர். 84% பவளப்பாறைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே 1998, 2014, 2017 ஆண்டுகளில் பவளப்பாறைகள் வெண்மையான நிகழ்வுகள் நடத்தேறியுள்ளன.  பவளப்பாறைகளுக்குள் வாழ்ந்து அவற்றை உண்ணும் வண்ணமயமான பாசிகள், நீரை வெப்பமாக்குவதன் விளைவாக நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்…

ஐரோப்பாவில் ஆப்பிள் மற்றும் மெட்டாவுக்கு €700 மில்லியன் அபராதம் விதிப்பு

டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டாவிற்கு ஐரோப்பிய ஆணையம் மில்லியன் கணக்கான அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் (DMA) கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டா ஆகியவை கடமைகளை மீறியதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை கண்டறிந்து , இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் முறையே €500…

போப்பின் உடலம் பசிலிக்காவுக்கு வந்தது: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்!

போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…