Tag முதன்மைச் செய்திகள்

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று: போக்குவரத்துப் பாதிப்பு! பள்ளிகளும் மூடல்!

நியூசிலாந்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, அந்நாட்டில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான வெலிங்டனிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் வெலிங்டனைத் தாக்கிய மிக மோசமான காற்று இதுவாகும். மேலும் சில பகுதிகளுக்கு ஏற்கனவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 24 மணி…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைப்பு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைப்பு தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரையில்…

உக்ரைன் – அமெரிக்கா கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

உக்ரைனும் அமெரிக்காவும் ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இது வாஷிங்டனுக்கு மதிப்புமிக்க அரிய கனிமங்களை அணுக உதவும். பல வாரங்களாக நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்கள் உக்ரைனின் பாதுகாப்பிற்கு வழங்கிய குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள்…

டென்மார்க்கில் கார் கட்டுப்பாட்டை இழந்ததில் 12 பேர் காயம்!

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பாலக் கடவை அருகே கார் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு முதியவர் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அவரது கார் பல பாதசாரிகள் மீதும் ஒரு ஈருளிறு ஓட்டுநர் மீது மோதியது. இச்சம்பவம் ஒரு பங்கரவாத தாக்குதலாக இருப்பதற்கான…

இந்தியா கொல்கத்தா விடுதி தீ விபத்தில் குறைந்தது 14 பேர் பலி!

இந்தியாவின் கொல்கத்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதியில் ஏற்பட்ட  தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஆறு மாடிகளைக் கொண்ட அந்த பட்ஜெட் விடுதியின் கூரையிலிருந்து சுமார் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், சிலர் கட்டிடத்தின் குறுகிய விளிம்புகளில் இருந்தும் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்து…

புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளைச் சோதனைகளை நடத்தியது வடகொரியா

வடகொரியா புதிதாகக் தயாரிக்கப்பட்ட  போர்க் கப்பல் இருந்து முதல் கப்பல் மற்றும் வான் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவிச் சோதனை நடத்தியது என  வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ புதன்கிழமை தெரிவித்துள்ளது. சோ ஹியோன் வகைக் போர்க்கப்பல் அடுத்த ஆண்டு பயன்படுத்தப்படும் என்று தலைவர் கிம் ஜாங் உன் கூறினார். இக்கப்பலிருந்து சூப்பர்சோனிக் மற்றும்…

வியட்நாம் போர் முடிவடைந்த 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள்!

வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததையடுத்து அதன் 50வது ஆண்டு நிறைவையொட்டி வியட்நாம் இன்று புதன்கிழமை ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்தியது. தெற்கு வியட்நாமிய நகரமான சைகோனில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.  முதல் முறையாக, சீன, லாவோ மற்றும் கம்போடிய துருப்புக்களின் ஒரு சிறிய குழு வியட்நாமிய இராணுவ அமைப்புகளுக்குப் பின்னால் அணிவகுத்துச்…

சுவீடனில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி!

சுவீடனின் உப்சாலா நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்தது. முகமூடி அணிந்த தாக்குதலாளி தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு செவிமடுக்கப்பட்டதும் மக்கள் பல திசைகள் நோக்கி தப்பியோடினர். ஸ்டாக்ஹோமிலிருந்து 45…

எதிர்கட்சிகள் ஒப்புக்கொண்ட நிலையில் பிரதமர் கார்னி தேர்தலில் வெற்றி பெற்றார்.

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின்  லிபரல் கட்சி குறிப்பிடக்கூடிய வெற்றியைப் பெறுவார்கள் எனக் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. லிபரல் கட்சியின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதால் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் கன்சர்வேடிவ்கள் தங்கள் இடங்களின் எண்ணிக்கையை 20 க்கும் அதிகமாக அதிகரித்துவிட்டதாகக் கூறினர். நாடாளுமன்றில் 343 இடங்களில் ஆட்சி…

சீன உணவகத்தில் தீ விபத்து: 22 பேர் பலி!

சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதால் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் இரண்டு அல்லது மூன்று மாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும்…