Tag முதன்மைச் செய்திகள்

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர்…

கிளிநொச்சியில் தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது.  இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது…

துருக்கியில் பேச்சுவார்த்தையில் புடின் இல்லாததை ஜெலென்ஸ்கி சாடினார்!

துருக்கியில் நடைபெறும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை புடின் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மாஸ்கோவிற்கும் கீவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்று வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார். இஸ்தான்புல்லில் எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை புடின் முன்மொழிந்தார். ரஷ்யாவின்…

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்”

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.  தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து…

யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. “தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம்…

2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான்பரப்பில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து கவுன்சில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது . இந்த விமானத்தில் இருந்த கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் 196 டச்சு குடிமக்களும் 28 ஆஸ்திரேலிய குடிமக்களும் அடங்குவர் என்று அவர்களின்…

மத்திய கிழக்கு பயணமாக சவுதி அரேபியாவில் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு பெரிய பயணமாக சவுதி அரேபியாவிற்கு வருகை தந்தார். பாரிய ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது தடவை பொறுப்பேற்றதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது முதல் பயணமாக  பயணமாக சவுதி…

வர்த்தகப் போர் பேச்சுவார்த்தைகள்: சீனாவும் அமெரிக்காவும் 90 நாட்களுக்கு வரிகளைக் குறைக்க ஒப்ப

வர்த்தகப் போர் பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று விதிக்கப்பட்ட கடுமையான வர்த்தக வரிகளில் சிலவற்றை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.  இந்த செய்திக்குப் பின்னர்…

காசாப் போர் நிறுத்த நம்பிக்கை: மெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

காசாவில் உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியாகக் கருதப்படும் எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது , அதே நேரத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள பாலஸ்தீன போராளிக்குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை…

கனடா பிரம்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது தமிழின அழிப்பு நினைவகம்

கனடாவில் Chinguacousy Park Brampton ON L6S 6G7 எனும் இடத்தில் தமிழின அழிப்பு நினைவகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கனடாவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு வரலாற்று தருணம்.  இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்…