Tag முதன்மைச் செய்திகள்

பள்ளிக் குழந்தைகளின் பேருந்து மீது தாக்குதல்: 4 சிறார்கள் பலி: 38 சிறார்கள் படுகாயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தை குறிவைத்து இன்று புதன்கிழமை (மே 21) நடத்தப்பட்ட தற்கொலைக் கார் குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. குஜ்தார் துணை ஆணையர் யாசிர்…

'கோல்டன் டோம்' ஏவுகணை கேடயத்தை எதிர்பார்க்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார். கோல்டன் டோம் ஏவுகணைகள் உலகின் பிற பக்கங்களிலிருந்து ஏவப்பட்டாலும், விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.  தனது “கோல்டன் டோம்” $175…

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ…

காசா விவகாரத்தில் இஸ்ரேல் மீது நடவடிக்கை: இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் மிரட்டல்!

காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால் உறுதியான நடவடிக்கைகளை இஸ்ரேல் மீது எடுப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. அத்துடன் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி மற்றும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள்…

காணி சுவீகரிப்பு – தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட,…

டிரம்ப் – புடின் தொலைபேசி உரையாடல்: இருதரப்பும் என்ன கூறுகின்றனர்?

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது அழைப்பு மிகவும் சிறப்பாக நடந்ததாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் மிக முக்கியமாக, போரை…

கனடாவின் நினைவுத்தூபி சர்வதேசத்துக்கு நின்றுகூறும் செய்தியும் அநுர குமரவின் அதிகார ஆணவப் பேச்சும்! பனங்காட்டான்

இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற,…

கனடா முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் நடந்த தமிழின அழிப்பு நாள்!

கனடா முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் நடந்த தமிழின அழிப்பு நாள்! கனடாவில் முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் தமிழின அழிப்பு நாளில் 16 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த…

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர். கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை…

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி…