Tag கொழும்பு

ஜெனரல் ஜகத் டயஸ் மிரட்டுகிறார்!

ஜெனரல் ஜகத் டயஸ் மிரட்டுகிறார்! தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

திசைகாட்டி:15பேர் வெளியே?

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் பதினைந்து எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் கூறியதாக  செய்தி வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்திற்கு சென்ற  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நெருங்கிய உறவைப் பேணி வருகின்றது.  …

ஏப்ரல் உள்ளுராட்சி: ஒப்புதல்!

எதிர்வரும் ஏப்ரல் நடாத்தப்படவுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள பிரேரணை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அதற்கான ஒப்புதல், இன்று (14), நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது பெறப்பட்டுள்ளது. இதனிடையே உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12…

நாமலைச் சந்தித்த அமெரிகத் தூதுவர் ஜூலி சங்

நாமலைச் சந்தித்த அமெரிகத் தூதுவர் ஜூலி சங் மதுரி Friday, February 14, 2025 கொழும்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (14) பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…

சந்தேக நபர்கள் விடுதலைக்கு தடை!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி எழுதிய கடித சர்ச்சைகள் மத்தியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

பதுக்கி வைத்திருந்த 3000 அரிசி மூடைகள் பறிமுதல்!

அதிக விலைக்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இந்த அரிசி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  தெரிவித்துள்ளது. அதன்படி, கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோகிராம் எடையுள்ள சுமார் 3,000 அரிசி மூட்டைகளை நுகர்வோர் விவகார…

கொலையாளிகளை பிடிக்க புதிய பிரிவாம்!

லசந்த கொலையாளிகளை மன்னித்து விடுக்க முற்பட்டு மூக்குடைப்பட்ட அனுர அரசு பல்வேறு குற்ற விசாரணைகளைக் கையாளும் நோக்கில் இலங்கை காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் என்ற புதிய பணியகத்தை அமைத்துள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர இயக்குனராகவும், பிரதி ஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா புதிய பணியகத்தின் பிரதி ஐஜியாகவும் பணியாற்றுவதாக பொலிஸார்…

தையிட்டி விகாரையை அகற்றமாட்டோமென சொல்லவில்லை!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் அங்கு போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

மீண்டும் இலங்கை முழுவதும் மின்வெட்டு!

மீண்டும் இலங்கை முழுவதும் மின்வெட்டு! இலங்கை முழுவதும் இன்று (10) மற்றும் நாளை (11) ஆம் திகதிகளில், ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.   நுரைச்சோலை  லக்விஜய   நிலக்கரி மின் உற்பத்தி நிலைய  மூன்று ஜெனரேட்டர்கள் செயலிழந்துள்ளதன்  விளைவாக   பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 3:30 மணி முதல் இரவு…