Tag கொழும்பு

கோட்டா சேர்:வெளியே வரத்தயாராம்!

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் சாட்சியமளிக்க கோத்தபாய முன்வந்துள்ளார்.எனினும் யாழ்ப்பாணத்திலன்றி கொழும்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்க நிபந்தனை விதித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

மாகாணசபை தேர்தல்: நடக்குமா? இல்லையா?

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கையரசின்  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.தேர்தலிற்கான தொடர்புடைய சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய வாக்களிப்பு முறையை ஏற்றுக்கொள்வதற்கான வரைவு சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் பொது…

கடற்படை இரகசிய முகாம்:உண்மைகள் வெளிவருமா??

இலங்கை கடற்படையினர் கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கு எதிராக முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் தேக்க நிலையிலுள்ளது. இந்நிலையில் முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

போதைப்பொருள் வியாபாரம்:கொழும்பிலும் கைது?

போதைப்பொருள் வியாபாரம்:கொழும்பிலும் கைது? கொழும்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்  என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே வடபுலத்தில் போதைபொருள் கடத்தலில் முப்படைகளும் தொடர்புபட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில் கொழும்பிலும் காவல்துறையினர் போதைபொருள் வர்த்தகம் தொடர்பில் கைதாகியுள்ளமை…

புதிய அரசியலமைப்பு அவசரம்!

புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.  புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய கால எல்லை பற்றி பிரதமர் தெளிவாக குறிப்பிடவில்லை. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தில் இதற்குரிய பணி இரகசியமாக இடம்பெறுகின்றதா எனவும் தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சிக்கு…

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை தேவை: தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் முன்னெடுப்பு!

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும்   இடம்பெற்றுள்ளது. திருகோணமலை வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள்…

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம் வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26)  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது !

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின்…

தொடரும் கைது வேட்டை!

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். திங்கள் கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும் துட்டுவாகை…

தேசபந்து தென்னக்கோனிற்கு கண்டம்!

கோத்தபாய அரசின் விசுவாசமான காவல்துறை அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணையில்  சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதியாகியுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதனை அறிவித்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.  தேசபந்து தென்னகோனை பதவியில்…