Tag இலங்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.  இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து…

கெஹெலியவின் வழக்கின் சாட்சியாளராக ரணில்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி…

நைஜீரியாவில் இருந்து எரிபொருளை இறக்க முடிவு?

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இஸ்ரேல்-ஈரான் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்தே, நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரி தயாரிப்புகளைப் பெற்று,…

எரிபொருளை பதுக்க வேண்டாம்

எரிபொருளை பதுக்க வேண்டாம் ஆதீரா Monday, June 23, 2025 இலங்கை தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.  மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும். இது எங்களுடைய பிரச்சினை அல்ல. உலகின் சக்திவாய்ந்தவர்களின்…

முன்னாள் எம்.பி.யை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. சஜின் வாஸ் குணவர்தன 2010 – 2012 காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்…

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்தது

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர்.  நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றதாகவும்…

எவ்வித ஆவணமும் இன்றி விடுவிக்கப்பட்ட 30 கைதிகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் ஆரம்பித்தது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில்…

போலி கடவுசீட்டுடன் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் கைது 

இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 2 பெண்கள், இந்திய கடவுச்சீட்டில் கொழும்பிற்கு சுற்றுலாப் பயணிகளாக வந்து சென்னை திரும்பிய நிலையில், அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட…

மண்டைதீவு புதைகுழி வதந்தியாம்

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை…

கொழும்பு கைவசம்:ஜீவனும் ஆதரவு!

வரலாற்றில் முதல்தடவையாக ஜக்கிய தேசிய கட்சி வசமிருந்த கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதனிடையே மலையகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள்…