Tag இலங்கை

சண்டையில்லை:படைகளிற்கு ஏன் அதிகம்!

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் இம்முறையும் அதிகரித்த தொகையாள 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல.அதனை தமிழரசுக்கட்சி எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு ஒதுக்கீட்டில் பாதுகாப்புச் செலவாக மொத்த வரவு செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 11 வீதத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய…

மார்ச் 21 ஆம் திகதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல்?

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித்…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்?

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.  எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை…

கட்டுநாயக்கவில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் துப்பாக்கிகள் மற்றும்  தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட மின்சார சபை

மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட மின்சார சபை ஆதீரா Tuesday, February 18, 2025 இலங்கை கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ளது. அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக  சபை தெரிவித்துள்ளது. மின் தடை…

கொலை சந்தேகநபராக 15 வயது சிறுவன் கைது

ஆதீரா Tuesday, February 18, 2025 இலங்கை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி, எஹெலியகொட பொலிஸ் பிரிவின் ஹொரகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில்…

வரவு செலவுத் திட்டதிண்டாட்டம்!

வரவு செலவுத் திட்டதிண்டாட்டம்!  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றக்குறை ரூ.2,200 பில்லியனாகும்.

வேர் வரை ஊழலை ஒழிப்போம்

வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும் அதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை…

இந்த தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்தால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்

டுபாயில் உள்ள  இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி…

மாணவர்களை வெயிலில் விட வேண்டாம்

பாடசாலை மாணவர்களை வெயிலில் வெளியே விட வேண்டாம் எனவும், தற்போது நிலவும் வெப்பமான வானிலையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஒரு சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்பு…