Tag இலங்கை

வெலிவேரியவில் துப்பாக்கி சூடு – சஞ்சீவ – பத்மே மோதலா?

வெலிவேரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருப்பினும், குறித்த இளைஞன் மீது இதுவரை எந்த குற்றவியல் குற்றச்சாட்டும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்…

25 வருடங்களாக இருட்டறையில் இருந்த பட்டலந்த வதைமுகாம் அறிக்கை!

பட்டலந்த வதைமுகாம் அறிக்கை 25 வருடங்களாக இருட்டறையில் இருந்ததாக சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்திற்கு குறித்த அறிக்கையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த போதே இதனைத் தெரிவித்தார்.  அறிக்கையை சமர்ப்பித்து தொடர்ந்து உரையாற்றுகையில், 1976 ஆம் ஆண்டில்  பெருமளவிலான பலத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி   அரசாங்கம் மக்களுடைய அபிப்பிராயம் இல்லாமல்…

சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவிக்கையில்,  பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு…

சிறைச்சாலை அதிகாரி கொலை – 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியான சிறிதத் தம்மிக்க நேற்றைய தினம் வியாழக்கிழமை  துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.…

மாலைதீவு படகுகளை விடுவித்தது!

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இரண்டு படகுகள், சர்வதேச கடற்பரப்பில் பயணித்தபோது மாலைத்தீவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டன. எனினும் அரசின் கோரிக்கையின் பேரில் இரண்டு படகுகளும் விடுவிக்கப்பட்டன. “சர்வதேச கடல் பகுதியில் தவறுகள் செய்யாமல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும், எல்லா நேரங்களிலும் சரியான பாதைகளில் பயணிக்கும் மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சு…

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பட்டப்பகலில் சுட்டுக்கொலை

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இனந்தெரியாத நபர்கள் சிலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  முன்னாள் சிறை அதிகாரி சம்பவ இடத்திலேயே காயமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் 61 வயதுடைய சிறிதத் தம்மிக்க பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரியே என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி…

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபரின் சகோதரி கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேகநபர்…

அதானியுடன் முரண்பட மறுக்கும் அனுர?

இந்திய முதலீட்டாளர் அதானியுடன் முரண்பட அனுர அரசு தொடர்ந்தும் பின்னடித்தே வருகின்றது.அதானியுடனான ஒப்பந்தம் இதுவரை இரத்து செய்யப்படவில்லையென அனுர அரசு அறிவித்துள்ள நிலையில் திட்டத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியின்படி செயல்பட அரசாங்கம் தயாராக இருந்தால், 484 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தமது நிறுவனம் மீண்டும் தொடங்கலாம் என்று அதானி கிரீன் எனர்ஜி இலங்கை எரிசக்தி…

மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை: சந்தேசநபர் கைது!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் க்டந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று புதன்கிழமை காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் முன்னர் துறவற அங்கிகளை…

மோசடி நிறுவனம் தொடர்பில் அறிவிப்பு

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல…