Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முன்னாள் கடற்படை தளபதி கைது முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த வார்டில் உள்ள…
செம்மணியில் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் வெளி வந்திருக்கின்றன. இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு…
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றனர் என்றும், 2018 தொடக்கம் 2020…
நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்,…
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் என…
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர். …
நாட்டில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் உள்ள இடங்களையும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜூலை…
ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற தேசிய முன்பிள்ளை பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளில் கலந்து கொண்ட போதே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கைப்பேசி பயன்பாடு இளம்…
யுத்தம் நடந்த மண்ணில் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் மனிதப்…