Tag இலங்கை

மோட்டார் சைக்கிள் ஓட்டி மீது தாக்குதல் – பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி நீக்கம்

கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 24 ஆம் திகதி நபரொருவருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சார்ஜன்ட் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.  கொகரெல்ல…

மாகாணசபைத் தேர்தல்: சாணக்கியனின் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு…

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா!

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தற்போது பரவி…

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை!

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து – ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்தார்.   ராஜபக்ஷக்களைப் பழிவாங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் நோக்கம் அல்ல. ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் தலையிட மாட்டோம்…

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள்…

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு மேல் ஆட்சியில் இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பொதுமக்களிடையே மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றது. தொலைநோக்கு அல்லது அனுபவம் இல்லாத…

காணி பிடிக்காதாம் அனுர அரசு!

வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று நாடாளுமன்ற…

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எம்மை  சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடையாது. எம்மீது  முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  ராஜபக்ஷக்களையும், கடந்த  அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல்  சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.  பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் …

புலிகளின் தலைவருக்கு சிலை வைக்க மாட்டேன்

புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்ற  அமர்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில்…

தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும்…