1
🤝 இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 🚀 – Global Tamil News
2
யாழ். பல்கலைக்கு சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – Global Tamil News
3
யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம் – Global Tamil News
4
திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா – விசேட கலந்துரையாடல். – Global Tamil News
5
திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு
6
தென் கொரியா மீது 25% இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி! – Global Tamil News
7
❄️ அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை முடக்கம்! 15,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து 🌨️ – Global Tamil News
8
பிாித்தானியாவைத் தாக்கவுள்ள 'சந்திரா' – Global Tamil News
9
யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில் – Global Tamil News
10
இந்திய குடியரசு தினம் – யாழில். விசேட கலாசாரப் பெருவிழா – Global Tamil News

🤝 இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 🚀 – Global Tamil News


இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், “ஒப்பந்தங்களின் தாய்” (Mother of all deals) என்று வர்ணிக்கப்படுகிறது. 📈 இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஒப்பந்தம் சுமார் 200 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. இந்தியாவின் 99% க்கும் அதிகமான ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரிச்சலுகை கிடைக்கும். குறிப்பாக ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு பெரும் வாய்ப்பு! ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் (110% வரி 10% ஆகக் குறைப்பு), ஒயின், ஆலிவ் ஆயில் மற்றும் இயந்திரங்களின் விலை இந்தியாவில் கணிசமாகக் குறையும். அடுத்த சில ஆண்டுகளில் ஜவுளி மற்றும் உற்பத்தித் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஆற்றல் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு சுமார் €500 மில்லியன் நிதியுதவி வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும். 🇮🇳✨ #IndiaEUFTA #TradeAgreement #EconomicGrowth #ModiInEU #GlobalTrade #IndiaBusiness #EuropeanUnion #MakeInIndia #HistoricDeal #TamilNews #BusinessUpdates

யாழ். பல்கலைக்கு சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – Global Tamil News


இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு  பயணமொன்றை மேற்கொண்டார். கடந்த இரு நாள்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ  பயணத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு  சென்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. Tag Words: #UniversityOfJaffna #CanadaInSL #IsabelleMartin #HigherEducation #JaffnaNews #AcademicCollaboration #Diplomacy #LKA #NorthernProvince

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம் – Global Tamil News


யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை காவல்துறையினா்  மடக்கி பிடித்ததுடன் , டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளனர்.  மற்றுமொரு டிப்பர் வாகனம் காவல்துறையினரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில் , அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் காவல்துறையின வீதியில் பயணித்த இரு டிப்பர் வாகனங்களை வழிமறித்த நிலையில் , காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை தொடர்ந்து சாரதிகள் செலுத்த முற்பட்ட வேளை ஒரு டிப்பர் வாகனத்தை  காவல்துறையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை காவல்துறையின  கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை, உரிய அனுமதிகள் இன்றி கிளாலி பகுதியில் இருந்து மணலை ஏற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் , சாவகச்சேரி மற்றும் கோப்பாய் காவல்துறைப் பிரிவுகளை தாண்டி சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நிலையில்  சுன்னாகம் காவல்துறையினரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #JaffnaCrime #SandSmuggling #ChunnakamPolice #IllegalMining #JaffnaNews #PoliceCrackdown #LKA #TrafficEnforcement #NorthernProvince

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா – விசேட கலந்துரையாடல். – Global Tamil News


மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தின் முக்கிய முடிவுகளாக இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் சங்கங்கள் இணைந்து விசேட பேருந்து சேவைகளை நடத்தவும், வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தடையற்ற மின்சாரம், குடிநீர் விநியோகம் மற்றும் தற்காலிக கொட்டகைகள் அமைத்தல் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவிப் படையினரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதி செய்யப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவும்  காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் விசேட கண்காணிப்புடன், வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் இராமக்கிருஷ்ணன், மேலதிக அரசாங்க அதிபர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதிநிதிகள் இக்கலந்தாய்வில் பங்கேற்றுத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். Tag Words: #Thiruketheeswaram #MahaShivaratri2026 #MannarNews #HinduFestival #SriLankaTemples #DevotionalPlanning #LKA #NorthernProvince #TempleFestival

திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு


திருகோணமலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மூவர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.​மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்றைய தினம் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.​நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.​திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றைய தினம் விடுமுறையில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.​இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,​இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தனித்தனியாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.  இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் ​பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், மாயமான ஏனைய இருவரையும் பாதுகாப்பாக மீட்க சகல பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

தென் கொரியா மீது 25% இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி! – Global Tamil News


by admin January 27, 2026 written by admin January 27, 2026 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 15%-லிருந்து 25%-ஆக உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தென் கொரியா அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2025 ஜூலையில் எட்டப்பட்ட “வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை” தென் கொரிய நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்காததே இந்த முடிவுக்குக் காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வரி உயர்வு குறிப்பாக வாகனங்கள் (Autos), மரம் (Lumber), மற்றும் மருந்துகள் (Pharma) ஆகிய துறைகளை நேரடியாகப் பாதிக்கும். “தென் கொரிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ளவில்லை. அமெரிக்கா தனது தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள நிலையில், மற்ற நாடுகளும் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,” என அவர் தனது ‘Truth Social’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தென் கொரிய அரசு இந்த அறிவிப்பு குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றும், இந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ________________________________________ இந்த வரி உயர்வு உலகப் பொருளாதாரத்திலும், மின்னணு மற்றும் வாகனச் சந்தையிலும் விலையேற்றத்தை ஏற்படுத்துமா? உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்! Related News

❄️ அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை முடக்கம்! 15,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து 🌨️ – Global Tamil News


அமெரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கனடாவின் சில மாகாணங்களை உலுக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 🛑 விமான சேவைகள் ரத்து: கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 15,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனவரி 25 அன்று ஒரே நாளில் 11,000-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது கோவிட் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான போக்குவரத்து முடக்கமாகக் கருதப்படுகிறது. கடும் பனி மற்றும் ஐஸ்கட்டிகள் மின் கம்பிகளில் உறைந்ததால், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. டென்னசி, மிசிசிப்பி மற்றும் லூசியானா மாகாணங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. உயிரிழப்புகள்: இந்த கோர புயலுக்கு இதுவரை சுமார் 50 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முடங்கிய கனடா: கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் 50% மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒன்டாரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. ⚠️ 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் -40°C வரை வெப்பநிலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #WinterStorm2026 #WinterStormFern #USA #Canada #SnowStorm #PowerOutage #FlightCancelled #WeatherUpdate #TamilNews #அமெரிக்கா #கனடா #பனிப்புயல் #வானிலை

பிாித்தானியாவைத் தாக்கவுள்ள 'சந்திரா' – Global Tamil News


மெட் ஆபிஸ் (Met Office) பிாித்தானியாவைத் தாக்கவுள்ள அடுத்த பெரிய புயலுக்கு ‘சந்திரா’ (Chandra) எனப் பெயரிட்டுள்ளது. இது  இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) நாடு முழுவதும் பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ஏற்கனவே பெய்த மழையினால் நிலம் அதிக ஈரப்பதத்துடன் (Saturated ground) உள்ளதால், தற்போது பெய்யவுள்ள கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை காரணமாக வீடுகள் மற்றும் வணிக நிலையங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தில் (கிழக்குக் கடற்கரை) மணிக்கு 60-70 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் (சில இடங்களில் 75 மைல் வரை). இதனால் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இதேவேளை லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு மழை மற்றும் காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு இங்கிலாந்து (Pennines) மற்றும் ஸ்கொட்லாந்தின் உயரமான பகுதிகளில் 10-20 செ.மீ வரை கனமான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றினால் M48 செவர்ன் பாலம் மூடப்பட்டுள்ளது. புகையிரத மற்றும் விமான சேவைகளில் இரத்துக்கள் அல்லது தாமதங்கள் ஏற்படலாம் எனவும் புயல் காரணமாக மின்சாரத் தடை மற்றும் அலைபேசி சமிக்ஞைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது பெரிய அலைகள் காரணமாகக் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “சந்திரா புயல் பலவிதமான இயற்கை இடர்களைக் கொண்டுவருவதால், பொதுமக்கள் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்பதோடு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்,” என முதன்மை வானிலை ஆய்வாளர் பால் குண்டர்சன் தெரிவித்துள்ளார். Tag Words: #StormChandra #UKWeather #MetOffice #AmberWarning #FloodAlert #SnowInUK #NorthernIreland #TravelDisruption #LKA #ClimateWatch

யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில் – Global Tamil News


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி , அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார். அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு , கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்திய குடியரசு தினம் – யாழில். விசேட கலாசாரப் பெருவிழா – Global Tamil News


இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் , வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். Tag Words: #IndiaRepublicDay #JaffnaEvents #CulturalFestival #IndoSriLankaFriendship #ThiruvalluvarHall #CulturalDiplomacy #LKA #IndiaAt77

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.