Mercury Transit In Taurus On May 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில் புதன் மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். புதன் சுக்கிரனின் ராசிக்குள் நுழைந்திருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக வேலை, முதலீடுகள், உறவுகள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில், மிகச் சிறிய கவனக்குறைவு கூட இழப்புகளுக்கு வழிவகுக்கும். இப்போது ரிஷப ராசிக்கு சென்றுள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எந்த அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலிலும் பல அழுத்தங்கள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைத்தால், எந்தவொரு செயலிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைப்பை பேண வேண்டும். எதையும் பொறுமையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

சிம்மம்
புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் தவறான புரிதல்களும் தகவல் தொடர்பு இடைவெளிகளும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பிரச்சனைகளை வரவழைத்துவிடும். அலுவலகத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதங்கள் அல்லது தகராறுகளைத் தவிர்ப்பது நல்லது. முதலீடுகளையும் முக்கிய நிதி முடிவுகளையும் இப்போதைக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் அல்லது கூட்டாண்மைகளில் நம்பிக்கை தொடர்பான சவால்கள் எழக்கூடும். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் நன்கு படித்து பார்த்து முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்கவும். இக்காலகட்டத்தில் உங்களின் வெளிப்படையாக பேசும் தன்மையும், புரிந்து கொள்ளும் விதமும் தான், உங்களுடைய மிகப்பெரிய பலங்களாக இருக்கும்.

கும்பம்
புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்காமல் இழுபறியாகும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயங்கள் கூட உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும். எனவே நன்கு சிந்தித்து பேச அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக எக்காரணம் கொண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.