← முகப்பு இன்றைய ராசிபலன்

Mangal Aditya Rajyog 2026 In Aries: மே மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய்

🕐 11 May 2026 📂 இன்றைய ராசிபலன் 52 பார்வைகள்
Mangal Aditya Rajyog 2026 In Aries: மே மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய்

Mangal Aditya Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கியும், மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மே மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மே 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மேஷ ராசியில் ஏற்கனவே கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் பயணித்து வருகிறார். இதனால் இந்த மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் இந்த ராஜயோகமானது மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. அதுவும் செவ்வாயின் சொந்த ராசியில் இந்த யோகம் உருவாகியிருப்பது இன்னும் சிறப்பானது. இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் கண்போம்.

Mangal Aditya Rajyog 2026 In Aries These Zodiac Signs Will Be Lucky

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தாலோ அல்லது புதிதாக முதலீடுகளை செய்தாலோ, நல்ல லாபம் கிடைக்கும்.

Mangal Aditya Rajyog 2026 In Aries These Zodiac Signs Will Be Lucky

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

Mangal Aditya Rajyog 2026 In Aries These Zodiac Signs Will Be Lucky

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Mangal Aditya Rajyog 2026 In Aries These Zodiac Signs Will Be Lucky

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net