← முகப்பு செய்திகள்

IPL 2026- Sunil Gavaskar Influence On IPL Rule Change And Qualifier Eliminator-

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
IPL 2026- Sunil Gavaskar Influence On IPL Rule Change And Qualifier Eliminator-

மும்பை: ஐபிஎல் லீக்கை மேம்படுத்துவதற்காக அணிகளின் தலைவர்களிடம் ஆலோசனை கேட்டதால், ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரால் தான் ஒருமுறை கண்டித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக்கின் முதல் மூன்று ஆண்டுகளில் கவாஸ்கர் இந்த நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

ஐபிஎல் லீக்கின் வளர்ச்சிக்குத் தனிப்பட்ட முறையில் உதவ யாருடைய அனுமதியும் தேவையில்லை என அந்தக் குழு உறுப்பினரிடம் தாம் தெரிவித்ததை கவாஸ்கர் நினைவு கூர்ந்தார். கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர், நிர்வாகி எனப் பன்முக அனுபவம் கொண்ட அவர், இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.

இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், வர்ணனையாளராகவும் திகழும் சுனில் கவாஸ்கரின் அந்தக் கடிதங்கள், ஐபிஎல்-இல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த முயற்சி லீக்கின் மிக முக்கியமான மற்றும் பரவலாகப் பாராட்டப்பட்ட ஒரு புதிய விதிமுறை மாற்றத்திற்கு வழிவகுத்தது.

CSK vs LSG: 13 பந்துகளில் சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல் அரைசதம்.. 7 சிக்சர்கள் பறக்கவிட்ட அசத்தல்

அதுதான் Qualifier மற்றும் எலிமினேட்டர் வடிவம். லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகளை வழங்கும் இந்த முறை, ஐபிஎல் தொடரின் ஒரு முக்கிய அம்சமானது.

இது குறித்து பேசிய கவாஸ்கர், "பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐபிஎல் நிர்வாகக் குழுவில் இருந்தேன். அப்போது லீக்கை எப்படி மேலும் சிறப்பாக உருவாக்குவது எனக் கேட்டு எட்டு ஃபிரான்சைஸ் அணித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் எழுதினேன்."

"பெரும்பாலானவர்கள் பதிலளித்தனர். பெரிய அளவிலான ஆலோசனைகள் எதுவும் வரவில்லை என்றாலும், ஆடம் கில்கிறிஸ்டின் ஒரு பரிந்துரை தனித்துவம் மிக்கது. தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் வடிவத்தின் மூலம் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவது."

"ஃபிரான்சைஸ் அணித் தலைவர்களிடம் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நான் யாருடைய அதிகாரத்தின் கீழ் கடிதம் எழுதினேன் என்று நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் என்னைக் கடிந்து கொண்டார். நான் எனது முன்னாள் கேப்டன் மற்றும் வீரர் என்ற தனிப்பட்ட முறையில், ஐபிஎல்-ஐ மேம்படுத்தும் நோக்கத்துடன் எழுதினேன்."

"இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று அவரிடம் கூறினேன். அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது நிர்வாகக் குழுவின் கையில் இருந்தது. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது ஒவ்வொரு ஃபிரான்சைஸ் அணியும் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முயற்சிப்பதற்கான முக்கிய உந்துதலாக இது உள்ளது," என்று கவாஸ்கர் விளக்கினார்.

IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து

அப்போதைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஐபிஎல்-ஐ தங்கள் "குழந்தை"யாகப் பாவித்ததாகவும், இப்போது அது "மிகவும் அழகான பெரியவர்" ஆக வளர்ந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தனது கருத்தை நிறைவு செய்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net