← முகப்பு செய்திகள்

IPL 2026: Gujarat Titans posted a daunting total of 229/4 against Chennai

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
IPL 2026: Gujarat Titans posted a daunting total of 229/4 against Chennai

அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 229 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை, குஜராத் பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், களம் இறங்கிய குஜராத் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

IPL 2026 Gujarat Titans Sets Massive 230-Run Target for Chennai Super Kings Sai Sudharsan and Gill Shine in Ahmedabad

கேப்டன் சுப்மன் கில் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுபுறம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற தமிழக வீரர் சாய் சுதர்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 53 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவர்களுக்குப் பின் வந்த ஜோஸ் பட்லர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். வெறும் 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸர் அடிக்க, குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

CSK vs GT: வாழ்வா சாவா நிலையில் சிஎஸ்கே.. குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்றது.. பிளேயிங் 11 என்ன?

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 56 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அறிமுக வீரர் குர்ஜப்னீத் சிங் 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 1 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்க
செய்திகள் · 35 நிமிடங்கள் முன்னர்
3
ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள சஹாரா வறுபூமிப் பகுதியில், தா
தலையங்கம் · 38 நிமிடங்கள் முன்னர்
4
அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
Ind vs AFG- Akash chopra says afghanistan struggles with DRS due
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
Vaibhav Sooryavanshi India Call-Up Astrologer Predicts He will br
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்க வான்வெளியில் உளவு பார்க்க வந்ததாகக் கூறி, கடந்த சில ஆண்ட
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net