Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (02.07.25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியின் குறுக்கே கடந்து சென்ற மாட்டை விலத்தி செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில்…
பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும், முறையான நீதிமன்ற அனுமதியுடன் இரு வழக்குகளையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தாம் ஆலோசனை செய்து வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான…
தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (02.07.25) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண…
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்று கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி…
நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டுவதனால், அப்பகுதி கழிவுகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு முன்பாக வீதியில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவ்வாறு கொட்டப்பட்டும் கழிவுகள் மாநகர…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர், யோஷித ராஜபக்சவும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவும் தலா…
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14…
கிருஷாந்தி கொலை வழக்கில் சட்டமருத்துவ அதிகாரியாகச் செயற்பட்ட கிளி போர்ட் பெரேரா, செம்மணிப் புதைகுழிப்பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டமருத்துவ அதிகாரிகளுடனும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கிருஷாந்தி கொலை வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதான பங்களிப்பை சட்டமருத்துவ அதிகாரி கிளி போர்ட் பெரேரா வழங்கியிருந்தார் என்பது…
செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.06.25) புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (1.07.25) மாலை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (30.06.25)) மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் எல்லை தாண்டி…