Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து…
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா .பொதிகள் இன்று (7)அதிகாலை மீட்கப் பட்டுள்ளது. மன்னாரில் நேற்று நள்ளிரவு (06.007.25) 12 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் காவல் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை…
செம்மணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06.07.25) மதியம் வரையில்…
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் கைது செய்யப்பட்டுள்ளர். குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர். குறித்த…
இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம்.புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே…
செம்மணியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (05.07.25) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (05.07.25) முன்னெடுக்கப்பட்டது.…
சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (05.07.25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார்.…
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, இலங்கை யாழ்பாணம் பகுதியில் உள்ள செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில்…
செம்மணியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (04.07.25) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஒன்பதாம் நாள் பணிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (04.07.25) முன்னெடுக்கப்பட்டது.…
யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு காவற்துறையினர் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 38 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில்…