Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரத்தினை இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது Spread the love தரமற்ற உரம்பிடியாணைமகிந்தானந்த அளுத்கமகே
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை தடுத்து வைப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக தனது அடிப்படை…
யாழ்ப்பாணம் மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணமும், ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை காவற்துறையினர் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து…
யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ,ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலை நேரம் , வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் , வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய…