Category tamil news

சங்கிலியன் நினைவு தினம் – Global Tamil News

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவசேனையின் ஏற்பாட்டில்…

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர் – Global Tamil News

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை…

டிப்பர் மீது துப்பாக்கி சூடு – Global Tamil News

யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் காவல்துறையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் காவல்துறையினர்  நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது. இதையடுத்து காவல்துறையினர் குறித்த…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது – Global Tamil News

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20)  முதன்முறையாக கூடவுள்ளது. சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல, அரச சட்டத்தரணி ஷக்தி ஜாகொட ஆரச்சி…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 11 போ் கைது – Global Tamil News

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை கைது செய்துள்ளதாக  இந்திய அதிகாரிகள்  தொிவித்துள்ளனா். இந்தியாவில்  சதிமுயற்சிகளை மேற்கொள்வதற்காக எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவச் செய்வதாகவும்   அதற்காக இந்தியாவில் பணத்துக்காக  நபா்களை  பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி…

முதியவர் சடலமாக மீட்பு – Global Tamil News

யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார்.உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றினை பராமரிக்கும் முகமாக முதியவர் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் , கடந்த சில தினங்களாக குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் , குடும்பத்தினர் அவரை தேடி சென்ற வேளை, உயிரிழந்த நிலையில் சடலமாக…

வடக்கு கடல் வழியான  போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் – Global Tamil News

வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமார, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், கடல் வழியான போதைப்பொருள் கடத்தல்களைத்…

விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.  சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும், அவரது நண்பரும் கடந்த 11 ஆம் திகதி யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த போது வாகனம் ஒன்றை முந்திச் செல்ல…

நல்லூரானுக்கு அருகில் அசைவ உணவகம் – நாளை எதிர்ப்பு போராட்டம் – Global Tamil News

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் செவ்வாய்க்கிழமை  மாலை 4.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ…

யாழில் தொடரும் மழை , இடிமின்னல் காரணமாக 17 பேர் காயம் – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மழை அனர்த்தத்தால் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜே/06 கிராம…