Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது. ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450ற்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர். குறித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர்…
மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் மாந்தையில் இடம்பெற்ற குறித்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் . மாவட்ட அரசாங்க அதிபர்…
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கரையோர பகுதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட கனிய மணல் அகழ்வுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் உள்ளூர் முகவர்கள் சிலரின் உதவியுடன் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மன்னாரில் காற்றாலை…
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி…
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தவில் வித்துவான் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்த நிலையில் , 19ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று…
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால்…
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டிப் பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட…
வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்னைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கள்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம்…