Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் இணைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் புகழ்பெற்றது. இப்பல்கலைகழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடைவிதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.…
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்ட…
வெள்ளவத்தை ஹெவ்லாக் சிட்டி வீட்டுத்தொகுதியில் இரண்டு பெண்களுடன் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்தார். பதில் காவற்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.…
அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றக் கூட்டமானது, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தை மாவட்ட செயலர் கருத்து தேடிவிக்கையில், அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத் திட்டத்திற்கு முதற்கண் நன்றியினைத் தெரிவிக்கிறேன். குறைநிரப்பு வேலைகளை நிரப்புவதற்காகவே அரச சார்பற்ற…
யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22.05.25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் போதே கண்காணிப்பு கமரா…
வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா…
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின்…
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். -மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த…
வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்று, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்தனர்.…
யாழ்ப்பாணம் – தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் யாழில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய நீரிணைப்புக்களை வழங்குவது எனவும் , பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா 500 பயனாளிகளுக்கு இலவசமாக நீர் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர்…