Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடந்த 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் தலமையில் சட்ட ஆலோசனை முகாம் இன்று (25) நடைபெற்றது. இதில் 30 வரையான சட்டத்தரணிகளும், 15 சட்டப்பீட மாணவர்களும் இந்த இலவச சட்ட…
ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை பதவி விலக செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்…
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் குறித்த தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் என்று எடுத்துக்காட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம்…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில்…
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் “Sri Lanka National Chess Excellency Awards 2025” எனும் விருதுகான பெயர் பட்டியலில் யாழின் இளம் சதுரங்க வீரன் வேணுகானன் நயனகேஷன் இடம்பிடித்துள்ள நிலையில், அவருக்கு வாக்களிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நடாளாவிய ரீதியில், அதிக பிரபலமான பாடசாலை சதுரங்க வீரர், அதிக பிரபலமான இளையோர் சதுரங்க வீரர், அதிக பிரபலமான சதுரங்க வீரர்,…
கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள்…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில், வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உகந்தமலையில் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில்,…
மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, “மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பல அரசியல் கட்சிகள்…
புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே, புதிதாக பல்கலைக்கழகத்துக்கு…
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்…