Category tamil news

போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர். தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை…

விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்! – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார். இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள…

வடமாகாண ஆளுநரை பிரதம செயலாளர் சந்தித்தார்! – Global Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ( 28.05.25) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில்…

குறைபாடுகளுடன் இயங்கும் தெல்லிப்பளை வைத்தியசாலை! – Global Tamil News

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதுடன், நோயாளிகளுக்கான வசதிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நோயாளர்களுக்கான அனுமதி வழங்குமிடத்தில் போதிய ஊழியர்கள் கடமையில் இல்லாமல் காணப்படுவதால் , அனுமதிக்காக பல மணிநேரம் நோயாளர் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. பெண் நோயாளிகளுக்கான விடுதியில் ஆண் துப்பரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால்…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு – Global Tamil News

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இலங்கை  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் கே. பி. எல். சந்திரலால்,   ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித குமாரசிங்ஹமற்றும்…

கைது செய்யப்படவுள்ள 40 அரசியல்வாதிகள் – Global Tamil News

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து   புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான  விமல் வீரவன்ச  குறிப்பிட்டுள்ளாா். தொலைக்காட்சி நேர்காணலின் போது  இதனைத் தொிவித்த   வீரவன்ச, இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின்…

வடக்கில் காணி அபகரிப்பு தொடர்பான வர்த்தமானி வாபஸ்! – Global Tamil News

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்…

கெஹெல்பத்தர பத்மே'வுக்கு, மூன்று போலி கடவுச்சீட்டுகள் – அதிகாரி கைது! – Global Tamil News

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு  குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவுத் திணைக்கள அதிகாரி இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.…

அல்பேனியாவில் 3 இலங்கையர்கள் கைது – Global Tamil News

  போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவா்கள்  இத்தாலியில் வழங்கப்பட்ட  குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும்,  அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள்  36, 51 மற்றும் 57 வயதுடைய 3    அலஙடகையா்கள் எனத் தொிவிக்கப்படுகின்றது. …

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு – Global Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும்…