Category tamil news

செம்மணியில் இதுவரையில் 63 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன! – Global Tamil News

செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 14ஆம் நாள் பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை (09.07.25) முன்னெடுக்கப்பட்டது. அதன்…

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள…

யாழில். வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் – மூவர் படுகாயம்! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 15 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர் வீட்டின்…

நயினாதீவு தேர் திருவிழா! – Global Tamil News

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில்…

நண்பர்களுடன் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியவர் நேற்றைய தினம் புதன்கிழமை (10.07.25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை சேர்ந்த அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முழவை சந்திக்கு அருகில் உள்ள வீதியோர பூங்காவின் ஆல மரம் ஒன்றின் கீழ் இருந்து, உயிரிழந்த நபரும் வேறு நபர்களும் இணைந்து மது அருந்தி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்! – Global Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  அவர், பிள்ளையான் சிறையில்  இருக்கும்போதே இதனை அறிந்து வைத்திருந்தார் என்பதற்கான தகவல்களும் உள்ளதாக  குறிப்பிட்டார். “யோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில்…

பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற உத்தரவு! – Global Tamil News

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09.07.25) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன்…

CIDயில் முன்னிலையாகுமாறு விமலுக்கு அறிவுறுத்தல்! – Global Tamil News

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுங்க ஆய்வு இல்லாமல் 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love   கொழும்பு குற்றப்…

வடக்கில் காவற்துறையினரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த கோரிக்கை! – Global Tamil News

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில காவற்துறையினருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம்…

செம்மணியில் தொடர்ந்தும் வெளிக்கிழம்பும் எலும்புக் கூடுகள்! – Global Tamil News

செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) மேலும் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்…