Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது, 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராமம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த நபரையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் ஏற்கனவே போதைப்பொருளுடன்…
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30.05.25) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை காவற்துறையினரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்ட…
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (30.05.25) கோப்பாய் காவற்துறையினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 லீட்டர் கசிப்பையும் காவற்துறையினர் கைப்பற்றி…
திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப்…
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30.05.25) 10.3 கிலோ கோகைனுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மூன்று பொம்மைகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டு சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக…
இலங்கைக்கு சென்றுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி கட்டண உத்தரவுகளை தற்காலிகமாக மீண்டும் அமல்படுத்த அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (29.05.25) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இந்த அவசர அதிகாரச் சட்டத்தின் கீழ் பரஸ்பர வரி கட்டணங்களை தொடர்ந்து வசூலிக்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த கட்டணங்களை நிறுத்துவதற்கான உத்தரவு அமெரிக்க…
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாக உள்ளது. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் நெதன்யாகு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. Spread the love இஸ்ரேல்…
யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். Spread the love கிராம சேவையாளர்பென்ரைவ்லஞ்ச…