Category tamil news

டொனால் டிரம்ப்பின் 50 சதவீத “வரிப் போர்” ஆரம்பம்! – Global Tamil News

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு  இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டு இருந்த  25 சதவீத வரி  மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று புதன்கிழமை (04.06.25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா,…

மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!! – Global Tamil News

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06.06.25) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03.06.25  செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித…

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி! – Global Tamil News

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம்…

ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார். அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், 20 வயதான…

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பிணை! – Global Tamil News

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனை பார்வையிட , வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரு இளைஞர்களும் சென்றுள்ளனர். அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வைத்தியசாலைக்குள்…

முதல் தடவையாக பெங்களூரு சம்பியனானது  – Global Tamil News

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இன்று (03)  அஹமதாபாத்தில்   நடைபெற்ற இறுதிப் போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணியினை வென்று முதல் தடவையாக பெங்களூரு  அணி சம்பியனாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு…

கிருஷாந்தி கொலை – மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளின் மனு தள்ளுபடி – Global Tamil News

1996 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (03) தள்ளுபடி செய்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஐந்து பிரதிவாதிகளும் தங்களுக்கு…

செம்மணி மனித புதைகுழி – இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள்…

ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவசர கடிதம் – பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை – Global Tamil News

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில்  “இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல்…

மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் – Global Tamil News

மனைவியை கொலை செய்ததாக   தொிவித்த  கணவன் ஒருவா் மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள  சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (03) செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம்  காவல்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில்…