Category tamil news

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன! – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில்,  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை (04.06.25)  சிறிய…

புதிதாய், புதுமையாய் பளிச்சிடும் பேரூந்து நிலையத்தின் பின்னால் புதர்மண்டிப் போகும் தேசத்தின் ஆன்மீக மரபுரிமை ! – Global Tamil News

ஹபறணை இலங்கையின் நாலாபக்கமுமான போக்குவரத்தின் மையமாக இருப்பது. மேற்படி சுற்று வட்டத்தின் மையத்தில் மேற்குப்புறம் பார்த்த வண்ணம் மகாசேனனின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. மேற்கு நோக்கி கொழும்பிற்கான பயணத்தின் தொடக்கத்தில், சந்தியிலிருந்து சொற்பதூரத்தில் தெருவின் இடதுபுறமாக சைவக் கோயிலொன்று நீண்ட காலமாக இருந்து வருவது. 1990களின் நடுப்பகுதியிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து கொழும்பு…

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்! – Global Tamil News

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் அம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL)போட்டியின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக கிரிக்கெட் வீரர் தரிந்து ரத்னாயக்கவைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Spread the love…

வெற்றி பெற்ற பெங்களூரு அணி வீரர்களை காணச் சென்றவா்களில் 11 போ் சனநெரிசலில் சிக்கி பலி – Global Tamil News

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிண்ணத்தை வென்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்களை காணும் ஆர்வத்தில்  சென்ற  ரசிகர்கள், சன நெரிசலில் சிக்கி 11 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் படுகாயம் அடைந்துள்ள   50இற்கும் மேற்பட்டோர்  பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 6…

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணையுங்கள் – Global Tamil News

உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டமான் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் இருக்கிறது. தமிழர் விடுதலைக்…

புதிய கூட்டு சுமந்திரனுக்கு எதிரானது மட்டுமே – Global Tamil News

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுமந்திரன் மீதான எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் செய்யும் பாரிய துரோகம் என சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி…

ஈ.பி.டி.பி யின் கொள்கையே சரியானது என்பதை காலம் வெளிப்படுத்தியுள்ளது. – Global Tamil News

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட  உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உறுதியுரை எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். “ஈ.பி.டி…

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம் – Global Tamil News

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால்  இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது Spread the love   குருந்தூர்மலைதமிழ் விவசாயிகள்போராட்டம்யாழ்.பல்கலைவிடுதலை

பேனா வடிவ துப்பாக்கியுடன் ஒருவர் கைது! – Global Tamil News

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒருவரை நேற்று மாலை (03.06.25) சோதனை செய்தனர். அப்போது, ​​குறித்த நபரின் சட்டைப் பையில் இருந்த இந்த வெளிநாட்டு…