Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றன. . சம்பந்தப்பட்ட வங்கியின் அடகு சேவைப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 கரட் தங்கம் போல் போலி தங்க நகைகளை அடகு…
யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்கான ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு அவை வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளாா். மேலும் ஆவணங்கள் மூவம் உறுதிப்படுத்தாவிடின் அந்த நகைகளின் ஒரு தொகை வடக்கின் பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவா் …
அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கையை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கவுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே டக்களஸ் இதனைத் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ்…
மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மேற்படி தீா்ப்பினை வழங்கியுள்ளாா். . சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும்,…
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்…
வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமையாகியுள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றினால் 15 வயது முதல்…
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.…
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலை கழக வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்வில் , பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட…
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி வரவேற்பு வளைவுக்கு அருகாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள்…