Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (06.06.25) நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு கோரி கப்பான் பார்க் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியது ஆதாரமற்றது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார். பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஒரு குற்றம் என்றும் துறைமுகத்திற்கு வரும் அனைத்து…
இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்,…
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி…
வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வான் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் , மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி…
நிலம் ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவா் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தாா். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…
சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக…
மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83000 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் நேற்றைய தினம் (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு…