Category tamil news

“பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம்” – Global Tamil News

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தபோது, பயங்கரவாதிகள்…

6 வருடங்களாக இந்தியாவில் சுற்றித் திரிந்த கிளிநொச்சிவாசி கைது! – Global Tamil News

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது. காவல்  நிலையம்…

சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண…

சுதுமலை அம்மன் ஆலய தேர்திருவிழாவில் மூவரின் சங்கிலி மாயம்! – Global Tamil News

யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம்…

யாழ் . இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டுத் தாக்குதல்! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில், இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞன் மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்…

கஞ்சாவுடன் தையிட்டி விகாரைக்கு சென்ற தென்னிலங்கை இளைஞன் விளக்கமறியலில்! – Global Tamil News

தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில் நடைபெற்ற பொசன் சிறப்பு வழிப்பாட்டிற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வந்த இளைஞன் ஒருவர் விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார் அதனை…

இலங்கையர்கள் ஐவா் இந்தியாவில் கைது – Global Tamil News

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முற்பட்ட  ஐந்து இலங்கையர்கள் இந்திய கடலோர காவல்படை  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.    படகு மூலம்  ராமேஸ்வரம் கடற்கரையை சென்றடைந்த     ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இரு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு  வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் …

சாவகச்சேரியில் போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்களை நன்னடத்தை பாடசாலைக்கு அனுப்ப உத்தரவு – Global Tamil News

சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.   சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை  காவல்துறையினா்  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை மூவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி , மருத்துவ சான்றிதழ்களை பெற்று…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் யாழில் கைது! – Global Tamil News

சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி காவற்துறையினருக்கு கிடைத்த  இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி…

வடக்கில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை! – Global Tamil News

பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன்  வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போது,  வடக்கு மாகாணத்தில்…