Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபா் இன்று இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா். ஊடகவியலாளர்…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளாா். சுகாதார அமைச்சிற்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக தொிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடா்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலைரயில் குறித்த பணிப்பெண்,…
தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின்…
சர்வதேச இரத்த தான தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் , யாழ் . போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வினை நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது. மனிதாபிமானம் நிறைத்த இந்த செயல்முறையில்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா். மருந்துப் பொருட்கள் இறக்குமதி தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை தொடா்பிலேயே இவா் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளாா் Spread the love குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்கெஹெலிய ரம்புக்வெல்லமருந்துப் பொருட்கள் இறக்குமதிரணில் விக்ரமசிங்க
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன் , அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை…
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு…
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) சிறை அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர்,…
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை…