Category tamil news

” எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” – Global Tamil News

” எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் , தெல்லிப்பளை வைத்தியசாலை போர் மற்றும்  இடப்பெயர்வுகளின் பின்னர்  2012…

குருநகாில் வெடிமருந்துகள் மீட்பு – Global Tamil News

யாழ்ப்பாணம் குருநகர்  பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்  காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் காவல நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை…

லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் வீழ்ந்து நொருங்கியது! – Global Tamil News

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற எயார் இந்தியா விமானம் இன்று வியாழக்கிழமை (12.06.25) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, மேகனிநகர் அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்தில் அடர்த்தியான புகை வெளியேறியுள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படை…

நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது! – Global Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறியதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒக்டோபர் 14ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு…

காமினி திசாநாயக்க பதவி விலகினார்! – Global Tamil News

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நிஷான் தனசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவர், 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது…

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்! – Global Tamil News

மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு…

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு! – Global Tamil News

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே…

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை! – Global Tamil News

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான  உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில்  வைத்து  வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம்…

மலையக காமன் கூத்து – கிழக்கில் காமண்டி – கோபிகா நடராசா. – Global Tamil News

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்கள், தனித்துவமான வரலாற்றையும், ஆழ்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கையுடன் பிணைந்துள்ள இவர்களின் வாழ்க்கை, அவர்களது கலை வடிவங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. தென்னிந்தியத் தமிழ் கலாசாரத்தின் வேர்களைக் கொண்டிருந்தாலும், இலங்கையின் மண்ணில் அவர்களது உழைப்பும், போராட்டங்களும், வாழ்வியலும் தனித்துவமான கலை வெளிப்பாடுகளைச்…

யாழில். தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் உயிர்மாய்ப்பு! – Global Tamil News

தேசிய மக்கள் சக்தியின் முழு நேர செயற்பாட்டாளர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (12.06.25) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஜான்சிகா (வயது 29) என்பவரே உயிர்மாய்த்துள்ளார். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் . அந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனது உயிரை…