Category tamil news

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி பலி! – Global Tamil News

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார் என ஈரானிய ஊடகங்கள்     உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த…

யாழில். தரம் பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் திண்மக் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (12.06.25)  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய மாவட்ட…

யாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில் – Global Tamil News

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை…

செம்மணிப் புதைகுழி விவகாரம் – உண்மையையும் நீதியையும் நிலைநாட்டப்பட்ட வேண்டும் – Global Tamil News

செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும்   நீதியையும் நிலைநாட்டத்தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு – விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் – Global Tamil News

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் . வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். தையிட்டி விகாரை அமைந்துள்ள…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக வழக்கு – Global Tamil News

யாழ்ப்பாணம் , பலாலி  காவல் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெரிவித்துள்ளனர்.   நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி  காவல்துறையினா் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகளின் போது , போராட்டம் நடத்தியவர் சார்பாக…

நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பம் – Global Tamil News

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்தினை முன்னிட்டு , கொடிச்சீலை இன்றைய தினம் வியாழக்கிழமை ஆலய உற்சவ குருமணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று 14ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை 09ஆம் திகதி காலை தேர் திருவிழாவும்…

கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் – Global Tamil News

யாழ்ப்பாணம் கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள்   மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.   குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை  காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Spread the love   எலும்பு சிதிலங்கள்கற்கோவளம் இராணுவ முகாம்மண்டையோடு

தனியார் காணிகளில் இருந்து வெளியேற மறுக்கும் கோப்பாய் காவல்துறையினா் – Global Tamil News

கோப்பாய்  காவல்துறையினா் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1995ஆம் ஆண்டு காலம் முதல் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள 09 தனியார் வீடுகளையும் அதனுடன் கூடிய காணிகளுமாக 2.77 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி 30…

அச்சுவேலி கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையை விட்டு சென்ற இராணுவம் – Global Tamil News

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் 30 வருட காலங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை நிலுவையாக விட்டு சென்றுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த கட்டடத்தை விட்டு…