Category tamil news

இந்தியாவின் மகாராஷ்டிரா, புனேயின் இந்திராயணி ஆற்றின் பாலம் இடிந்து பலர் பலி! – Global Tamil News

இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது.…

வவுனியாவில் நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்! – Global Tamil News

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது. கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி,…

 இளைஞர் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை! – Global Tamil News

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசை வழுபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாதயாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு விசேட வழிபாடுகள், சந்நிதியான் ஆச்சிரம உபசரணைகள், உதவிகளுடன்…

யாழ். கடற்கரைகளில் ஒதுங்கி வரும் இரசாயன மூலப்பொருட்களை அகற்றும் வேலைத்திட்டம் – Global Tamil News

யாழ்ப்பாணம் தீவக பகுதி கடற்கரைகளில் ஒதுங்கி வரும் பிளாஸ்டிக் தயாரிப்புக்கான இரசாயன மூலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நயினாதீவு தெற்கு  கடற்கரை பகுதியில் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இலங்கை விமானப்படையுடனும் கடற்படையின் உதவியுடனும் இரசாயன மூலப்பொருளை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

வாள் வெட்டில் நால்வர் படுகாயம் – Global Tamil News

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Spread the…

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை – Global Tamil News

தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான  ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள  56 வயதான…

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.  – Global Tamil News

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15)  இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கை செல்கின்றாா்.   அவா் தனது  பயணத்தின் போது, ​​நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற…

ஈரானின்  ஏவுகணை தாக்குதல்களில் இலங்கையா்  இருவர் காயம் – Global Tamil News

இஸ்ரேல் முழுவதும் ஈரான்  ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால் இலங்கைப் பெண்கள்  இருவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நகருக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்ள்ளாா் , அதிகாலை 03:30 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் போன்று உலுக்கியதை அடுத்து, குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.…

  உலங்குவானூா்தி விபத்தில் ஐவா் பலி – Global Tamil News

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து விமானி உட்பட 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற  உலங்குவானூா்தி ஒன்று கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து  விபத்துக்குள்ளானதில்  அதில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்  வெளியாகியுள்ளது . இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு  புறப்பட்ட  ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு…

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி ,  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.  பொலிகண்டி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதியில் , படகொன்றில் கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இறக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு இராணுவ புலனாய்வாளர்கள் விரைந்த போது. கஞ்சா போதை பொருளை இறக்கி கொண்டிருந்த நபர்கள்…