Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் , ஐஸ் , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில். காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , ஒரு கிராம் ஐஸ் மற்றும் 50 கிராம் ஹெரோயின் ஆகிவற்றுடன் ஒருவரும் , 05 கிராம் கஞ்சாவுடன் ஒருவரும் , 04…
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா…
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு மேற்கொள்ள யாழ்…
வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில்…
இன்று (16.06.25) காலை Bnei Brak பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின.…
இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள 92 வயதான ஞானசவுந்தரியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வயதான பெண்ணின்…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாத நிலையில் உயர் பாதுகாப்பு…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.06.25) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு…
இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது.…
வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது. கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி,…