Category tamil news

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! – Global Tamil News

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக…

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி பிடித்த காவற்துறையினர் – சாரதி கைது! – Global Tamil News

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை காவற்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை மந்திகை சந்திக்கு அருகில் கடமையில் இருந்து காவற்துறையினர்  வழிமறித்த போது, டிப்பர் சாரதி வாகனத்தினை நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளார்.…

யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு! – Global Tamil News

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கே பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி…

கூமாங்குளத்தில் காயமடைந்த காவற்துறையினர் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி! – Global Tamil News

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11.07.25) ) இரவு காவற்துறையினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.  சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காவற்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்? – Global Tamil News

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவர் வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டுள்ளார். இவர்  தற்போது…

கூமாங்குளத்தில் காவற்துறை துரத்தியதில் ஒருவர் பலி- மக்கள் போராட்டம் – அமைதியின்மை! – Global Tamil News

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11.07.25) இரவு போக்குவரத்து காவற்துறையினர் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு (11.07.25) 10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள…

ராஜிதவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவு! – Global Tamil News

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை மீறி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு…

அகமதாபாத் விமான விபத்திற்கு எரிபொருள் விநியோக வால்பு அடைப்பே காரணம்! – Global Tamil News

இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று வெளியானது. அதன்படி, விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டு உள்ளது. விமானம் புறப்பட்ட 32…

புதுக்குடியிருப்பு மந்துவிலில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு! – Global Tamil News

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று…

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாகும் இலங்கையின் பல பொருட்களுக்கு தீர்வை வரி நீக்கம்! – Global Tamil News

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரியின்றி இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தக யோசனை, இந்த…