Category tamil news

பருத்தித்துறை நகர சபையை தமழ்தேசிய பேரவை + சங்கு கூட்டணி கைப்பற்றியது! – Global Tamil News

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (17.06.25)  பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு…

பருத்தித்துறை பிரதேச சபை தமிழ் அரசுக் கட்சியின் வசமானது! – Global Tamil News

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (17.06.25) பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்  நடைபெற்றது. 20 உறுப்பினர்களை கொண்ட…

யாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்! – Global Tamil News

யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு தெரிவித்துள்ளார். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதானி விவேகானந்தராஜாவை நேற்றைய தினம் (16.06.25) சந்தித்தார். இந்திய்ய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில்…

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! – Global Tamil News

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக   லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதையும், இரவு நேர நிகழ்வுகளில் பங்கேற்பதையும், விழாக்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபடுவதையும்…

தெஹ்ரானை விட்டு மக்களை வெளியேறச் சொல்கிறார் டிரம்ப்! – Global Tamil News

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி  சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

அயத்துல்லா அலி கொமெனி  குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சம்? – Global Tamil News

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவரான 86 வயதுடைய  அயத்துல்லா அலி கொமெனி  குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 13 ஆம் திகதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த…

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இளைஞனிடம் இருந்து 11 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.   கைது செய்யப்பட்ட இளைஞனை  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து…

திடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக கூடிய மக்கள் – Global Tamil News

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்  இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை.ஆனாலும் திடீரென மக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு…

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் – Global Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார்.  யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.…

290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் – Global Tamil News

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில்,  அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு…